இந்தியா
Typography

‘ஒற்றுமைக்கான ஒரு கச்சேசி’ (Ekam Satt Unity Concert: The 50th Symphony) என்னும் தலைப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் இசையமைக்கவும், பாடவும் உள்ள லைவ் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அது குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அரசியல் பிரிவினை அதிகமாக நடந்துவரும் இந்த காலகட்டத்தில், கலைஞர்கள் அதைக் குறித்து கருத்து தெரிவிப்பது எவ்வளவு முக்கியமானது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “பிரிவினை அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. எனினும் மக்கள் ஒற்றுமையால் கட்டப்படுகிறார்கள். நாம் அனைவரும் நம்பிக்கையையும், அறிவையும் பகிர்வதில்தான் அமைதி கொள்கிறோம். பள்ளிக் குழந்தைகளை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம். சொன்ன விஷயத்தை மறுபடியும் அவர்களிடத்தில் சொன்னால், ஏற்கனவே சொன்னதை நீங்கள் சொல்லவேண்டாம் என பதில் அளிப்பார்கள். உண்மையை அவரவர்களே அறிந்துகொள்ளவேண்டும். அதுதான் சிறந்த விஷயமாக இருக்கும்” என்று கூறி பிரிவினை அரசியல் எடுபடாது என்பதை தெளிபடக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் ‘டியர் மிஸ்டர் ஏ ஆர் ரஹ்மான்.. நீங்கள் இது வரை சம்பாதிச்ச பணத்துக்கு உடனே ஜி.எஸ்.டி செலுத்துங்கள்’ என்று கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு, ஜிஎஸ்டி கமிஷனர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS