இந்தியா
Typography

ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், படித்தது வளர்ந்து எல்லாமே சென்னையில். இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார். ‘ஆரண்யகாண்டம்’ படத்தால் இவரது மகன் சரண் கடனாளி ஆனதாவும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாவும் செய்திகள் வெளிவந்தன.

மேலும் நஷ்டத்தில் இருந்த சரண், நடிகை சோனாவிடம் நெருக்கமாக இருந்தது சர்ச்சையாக, பின்னர் அவர் சுதாரித்துக்கொண்டார். மகனுக்காக கடந்த சில வருடங்களாக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இசை நிகழ்ச்சிகளில் பாடி பொருள் சேர்த்து கடனை அடைத்துள்ளார் எஸ்.பி.பி.

இதற்கிடையில் எஸ்.பி.பிக்குச் சொந்தமாக நெல்லூரில் பூர்வீக வீடு ஒன்று உள்ளது. திரைத்துறையில் அறிமுகமான பின்னர் அவர் சென்னைலேயே தங்கி விட்டதால் நெல்லூரில் இருக்கும் வீடு பூட்டியே கிடந்ததாகக் கூறப்பட்டது. தனது பரம்பரை சொத்து என்பதால் அதை விற்க மனமில்லாத எஸ்.பி.பி, அதை காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்க இருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த வீட்டை அவர் காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கிட்டார் என அவரது திரையுலக நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. அவர் தனது வீட்டை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஒப்படைக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அந்த வீட்டில் காஞ்சி மடம் சமஸ்கிருத வேத பாடசாலை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுது. வீட்டை தானமாகக் கொடுத்தது குறித்து எஸ்.பி.பி.தரப்பில் கேட்டபோது அதை வைத்து விளம்பரம் வேண்டாம் என எஸ்.பி.பி. கூறுவதாகத் தெரிவித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS