இந்தியா

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ஆம் ஆண்டு பதவியேற்றதும் பிப்ரவரி 18ஆம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட மொத்தம் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து திமுக தரப்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக திமுக சட்டசபை கொறடா சக்கரபாணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த மேற்கண்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் கடந்த 4ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில், கடந்த 3 ஆண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சபாநாயகர் காலதாமதம் செய்து வருவது ஏன் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. மேலும், இந்த விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 14ஆம்(இன்று) தேதிக்கு ஒத்திவைத்தது.

அதன்படி, இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்கம் செய்வதி பற்றி சபாநாயகரே முடிவெடுக்கலாம், என தெரிவித்துள்ளது. மேலும், இவ்விகாரத்தில் முடிவெடுக்க சபாநாயகருக்கு கால அவகாசம் எதுவும் விதிக்க முடியாது என கூறிய நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.