இந்தியா

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடந்த வன்முறையில், இதுவரை 38 பேர் பலியரியுள்ளதாகவும் மேலும் பலர் பலத்தகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

கொல்லப்பட்டவர்களில் காவல் துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் மற்றும் உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா ஆகியோரும் அடங்குவர்.

உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் உடலை உடற்கூறாய்வு செய்த டாக்டர்கள், அவரது உடலில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை காலமும் இப்படிப்பட்ட ஒரு கொடூரமான கொலையை தங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை தெரிவித்துள்ளனர். அன்கிட் சர்மாவை வன்முறைக் கும்பலால் நீண்ட நேரம் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா தந்தை கொடுத்த முறைப்பாட்டின் பேரில், இக் கொலை தொடர்பில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தவிர தாஹிர் உசேன் வீட்டு மாடியில் வன்முறையாளர்கள் தங்ஙியிருந்ததாகவும், தாக்குதலுக்குப் பாவித்த பெட்ரோல் குண்டுகள், செங்கற்கள், என்பன இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு, கொலை, தீவைப்பு உள்ளிட்ட பிரிவுகளிலும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, அவர் மீதான போலீஸ் விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தலைமை அறிவித்துள்ளது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.

இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.