ரஜினிகாந்த் அன்மையில் நடைபெற்ற துக்ளக் விழா மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த சில சந்திப்புக்களில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்த நிலையில் ரஜினிகாந்த் வீட்டிற்கு காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் காவல்துறையின் காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு நடிகர் ரஜினிகாந்தை, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று சந்தித்து பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகப் பேசிய போது, தனக்கும், தன் வீட்டிற்குமாக வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை திரும்பபெற்றுக்கொள்ளும் படி ரஜினிகாந்த் கேட்டுகொண்டதாக, காவல்துறை தரப்பிலான தகவல் வெளியாகியுள்ளன.
ரஜீனிகாந்தின் இந்த வேண்டுகோளை கேட்டுக்கொண்ட காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு, இது தொடர்பில், , காவல் துறை இயக்குனரிடன் கலந்தாலோசித்து முடிவு செய்யவதாக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.