புதிய இந்தியா உருவாக்கத்தில் மாற்றுத் திறனாளிகளும் இணைந்திருப்பார்கள் எனத் தாம் நம்புவதாக, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோருக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உபயோகப்பட கூடிய உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பிரதமர் மோடி வழங்கினார்.
அங்கு உரையாற்றிய அவர் உரையாற்றுகையில், முன்பு ஆட்சி செய்த அரசாங்கங்கள் இதுபோன்ற உதவி வழங்கும் முகாம்களை நடத்தியது மிகக்குறைவு. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் எங்களுடைய அரசு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் ஒன்பதாயிரம் முகாம்களை நடத்தி உள்ளது.
புதிய இந்தியா உருவாவதற்கு மாற்றுத்திறனாளி இளைஞர் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தை ஆகிய ஒவ்வொருவரின் முறையான பங்கும் அவசியம் என கருதுகின்றேன். அவர்களது உழைப்பு ஒரு தொழிற்சேவையாகவோ அல்லது விளையாட்டுத்துறை சார்ந்தோ எதுவாகவும் இருந்தாலும், அவர்களின் திறமைகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.