டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைகளில் உயிரிழந்தோர் தொகை 46 ஆக உயரந்துள்ளது. இந்த வன்முறை தொடர்பான விசாரணைகளை, இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக்கள் நடத்தி வருகிறன. இதுவரை இந்த வன்முறைகள் தொடர்பாக, 41 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 903 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் கூடுகின்ற போது, டெல்லி வன்முறைகள் தொடர்பிலான விவாதங்கள் நிகழவுள்ளதாகத் தெரிய வருகிறது. இது தொடர்பில் மக்களவையில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திமுக ஆகியன முன்னறிவிப்பு கொடுத்துள்ளன. இதேபோல், மாநிலங்களவையில் விவாதிக்க, ஆம் ஆத்மி, இந்திய கம்யூ.,மார்க்சிஸ்ட் கம்யூ. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான முன்னறிவிப்பு விடுகப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை இரு அவைகளும் ஆரம்பமாகியதும், எதிர்கட்சிகளின் ஆட்சேபங்களால் பிற்பகல் வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள், ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.