இந்திய அரசியற் பிரபலங்கள் முதல் அனைத்துப் பிரபலங்களும், சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றார்கள். இவர்களில் முக்கியமானவர் இந்தியப்பிரதமர் மோடி. பிரதமர் மோடியை அவரது டுவிட்டர் பக்கத்தில் மட்டும் 5 கோடியே 33 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
பிரதமராக பதவியேற்றது முதல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துகளை தெரிவிப்பதை செய்து வரும் பிரதமர், சமூக வலைதளங்களிலிருந்து விலகலாமா என யோசித்து வருவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளது அவரைப் பின் தொடர்வோருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
“டுவிட்டர் , பேஸ்புக் ,இன்ஸ்ட்ராகிராம், யூடியூப் உள்பட அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் இருந்து வெளியேறுவது குறித்து நேற்று யோசித்தேன்” என பிரதமர் மோடி இன்று பதிவிட்டதைத் தொடர்ந்து, அவரது டுவிட்டர் பதிவுக்கு “நோசார்” (#NoSir) என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் தற்பொது #NoSir என்ற ஹேஸ்டேக் சமூகவலைதளங்களில் டிரண்டாகி வருவதாகத் தெரியவருகிறது.