வியன்னாவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானப் பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. சென்ற 25ந் திகதி இந்தியா வந்த, டெல்லியைச்சேர்ந்த அந்தப் பயணி ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருந்து வந்தமையால், டெல்லி விமான நிலையத்தில் அவர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது.
ஆனால் தற்போது விசாரணைகளில் அவர், இத்தாலியில் இருந்து தரைமார்க்கமாக வியன்னா சென்று, அங்கிருந்து டெல்லி சென்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அப் பயணி வந்த விமானத்தில் பணியாற்றிய அனைத்துப் பணியாளர்களையும், 14 நாட்கள் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அனுப்பியுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் காணப்பட்டால் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்த ஏனைய பயணிகளுக்கும் இந்த அறிலுறுத்தல் விடுக்ப்பட்டதா எனத் தகவல்கள் தெரியவில்லை.