ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில், இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளமை தொடர்பில், இந்தியா தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் என்பது இந்தியாவின் உள்நாட்டு விடயம். இந்தியா தனது உள் நாட்டு விவகாரகங்களுக்காக சட்டங்களை உருவாக்குவதற்கான உரிமை உடையது இந்திய நாடாளுமன்றம். அதன் இறையாண்மை உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை எனக் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் ஐநாவின் மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் நிரந்தர தூதர், இந்த முடிவு குறித்து தெரிவித்ததைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சகத்தினால் இந்த நடவடிக்கைக்கு எதிரான அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு ஜனநாயக நாடு இந்தியா. எங்கள் சுயாதீன நீதித்துறை மீது நாங்கள் அனைவரும் மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் வைத்துள்ளோம். எங்களின் நியாயம், சட்டபூர்வமான நிலைப்பாடு என்பன சுப்ரீம் கோர்ட்டால் நிரூபிக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.