இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகைகளில் நான் கலந்து கொள்வதை தவிர்க்கவுள்ளேன் என டெல்லி முதல்வர் அர்வித் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற அன்மைய கலவரங்களில் உயிர் பலியானவர்களை நினைவு கொள்ளும் வகையில் இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகையில் கலந்து கொள்வதைத் தவிர்க்கின்றேன். மேலும் தற்போது எழுந்துள்ள கோரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையிலான கவனயீர்ப்ப்பாகவும் அது அமையும் என நம்புகின்றேன் என அவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.