இந்தியா
Typography

தலைநகர் டெல்லியில் 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் வைத்து நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவியை பாலியத் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (27), அக்‌ஷய் குமார் (33) ஆகிய நான்கு பேருக்கும் இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவர்களுக்கான மரண தண்டனை இன்று காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட்டதை திகார் சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.

முன்னதாக வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட போதிலும், மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில், நான்கு பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களுக்கான தண்டனை மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது.

இறுதியாக நேற்று நள்ளிரவு வரை குற்றவாளிகள் அனுகிய அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இத் தண்டனை நிறைவேற்றம் தொடர்பாக , தனது டுவிட்டரில் "பெண்களின் கௌரவம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்வதற்காக நிறைவேற்றபட்ட இந்த தண்டனை மிக முக்கியமானது . இதன் மூலம் நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது " எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிர்பயாவின் தாயார் தனது மகளின் ஆத்மா சாந்தியுறும் எனத் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்