இந்தியா
Typography

தமிழகத்தில் நேற்றைய தினம், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் பரீட்சார்த்தமாக பிரதமர் மோடி விடுத்த அறிவுக்கு ஏற்ப, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கில் வீடுகளில் இருந்தார்கள். இதேவேளை வரும் 31-ந் தேதி வரை நாடு முழுவதும் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படவுள்ளது.

அயல் மாநில எல்லைகள் மூடப்பெற்று, அந்த மாநிலங்களுக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தமிழகம் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

நாடு முழுவதுமுள்ள 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக பின்பற்றுமாறும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இந்த 75 மாவட்டங்களுக்குள் வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதற்கும் நாளை மாலை முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான காலப்பகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

இந்த 144 தடையால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய துறைகளின் விநியோகம், சேவை என்பவற்றில் பாதிப்பு ஏற்படாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க தமிழகத்தின் அன்டைய மாநிலங்களில் ஒன்றான புதுச்சேரியிலும் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்