இந்தியா
Typography

தமிழகத்தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது உறுதியாகியுள்ள நிலையில், தமிழக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் நாளை மாலை முதல் மார்ச் 31ம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த 144 தடை உத்தரவு நாளை மாலை முதல் அமுலுக்கு வரவுள்ள நிலையில் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு, பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். உத்தரவு அமுலுக்கு வரும் போது, உள்ளூர், வெளியூர் போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்தபடலாம் என்பதால், அதற்கு முன்னதாக தமது சொந்த ஊர்களுக்குப் பலரும் குடும்பங்களுடன் செல்வதற்கு முனைகின்றனர்.

ஆனால் தென் மாவட்டங்களுக்கு குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் பலரும், நள்ளிரவு தாண்டியும் பேருந்து நிலையங்களில் நின்றதாக அறிய முடிகிறது.

கொரோனா தொற்றுத் தவிர்க்க மக்கள் பொது இடங்களில் அதிகளவு கூட வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் மக்கள் இவ்வாறு திரளாகக் குழுமியுள்ளார்கள்.

இத்தாலியில் வைரஜ் தொற்றின் ஆரம்ப நாட்களில் அரசு அறிவித்த சமூகக் கூடலைத் தவிர்க்கும்படி கூறிய அறிவுறுத்தலை மக்கள் கவனித்துக் கடைப்பிடிக்கத் தவறியதே இத்தாலியின் பெரும் இழப்புக்களுக்கான அடிப்படை எனத் தெரிவிக்கபப்டுகையில், அதே பாணியில், சென்னைப் பெருநகரத்தில் இருந்து தென் கிராமங்களுக்குப் பெருந்திரளாகப் படையெடுக்கும் இம்மக்கள் கூட்டத்தை காண்கையில் அச்சமாக இருப்பதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்