இந்தியா
Typography

தமிழகத்தில் கொரோனா மிகவும் வேகமாக பரவத் தொடங்குகிறது. மக்கள் நலனுக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மக்கள் மதித்து நடந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில் , கொரோனா வைரஸ் செயற்பாடுகள் குறித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில்; கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட இருக்கின்றன. இதனால் நேற்று முதலே மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் பேருந்து நிலையங்களில் கூட்டம் நிறைந்திருக்கிறது. மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி வருகின்றனர்.

மக்கள் வெளியேற கூடாது என்று அறிவித்துள்ள நிலையில் வீடற்ற, ஆதரவற்ற மக்களின் நிலை குறித்த கேள்வி எழுந்துள்ளது. தமிழக மக்களுக்கு நிவாரண பணிகளை அறிவித்துள்ள நிலையில் ஆதரவற்ற மக்களுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.

மாவட்டங்கள் முழுவதும் பொது சமையற்கூடங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சூடான, சுகாதாரமான உணவை ஆதரவற்றோர்களுக்கு அவரவர் வாழும் இடங்களுக்கே சென்று வழங்க ஏற்பாடுகளை முதலமைச்சர் துரிதப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் அரசின் அறிவுறுத்தலை ஏற்று, தங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே பல்வேறு நோய்கள் இருந்தாலும் மதுரையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்று நோயாளியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது. ஆகவே இதிலிருந்து தற்காத்துக் கொள்வதே மிகச் சரியானதாகும் எத் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு பேரவையில் அனைவரும் கரவொலி எழுப்பி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்