இந்தியா
Typography

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறையினரின் அறிவிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் சுமார் தொற்றினால் பாதிக்;கப்பட்டவர் தொகை 500 ஐ தாண்டியுள்ளது. 9 பேர் வைரஸ் தொற்றினால் பலியாகியுள்ளதாகவும் அறியப்படுகிறது.

இந்திய சனத்தொகைப் பரம்பலில் இது பெரிதல்ல என மக்களில் பலரும் நினைத்து வருகின்றார்கள். ஆனால் இத் தொற்று பெரும் சமூக நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியது என்பதனை ஏற்கனவே வைரஸ் தொற்றுக்கு உள்ளான நாடுகளின் தரவுகளும், இழப்புக்களும் அறிவுறுத்துகின்றன.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சென்ற 22ந் திகதி நாடு தழுவிய ரீதியில் பரீட்சார்த்தமாக அறிவிக்கபட்ட ஊரடங்கு உத்தரவினை பல்வேறு மாநிலங்கள் நீட்டித்தன. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்கள் தங்களது எல்லைகளை மூடி சீல் வைத்து, 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் போது, மக்கள் விதிமுறைகளை மீறிய சம்பவங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளன. ஊரடங்கு உத்தரவின் போது வடமாநிலங்களில் மக்கள் கூட்டமாக நின்றுள்ளனர் என்றும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை பலர் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு முக்கிய உரையை ஆற்றுகிறார். இது தொடர்பான அறிவிப்பினை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது இன்றைய உரையில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் இதனுடைய பாதிப்பு குறித்து அதிகமாக கவலைப்படாததால் மோடி தனது உரையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்