இந்தியா
Typography

இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார். இன்றிரவு 8 மணியளவில் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர், ஒரு நாள் ஊரடங்கை ஏற்று நடந்தது மூலம், இந்தியர்கள் அனைவரும், நாடு மற்றும் மனித குலத்திற்கான எந்தவொரு பிரச்சனைக்கு எதிராகவும் போராட ஒன்றிணைவோம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது.

ஒவ்வொரு இந்தியனும் பொறுப்புடன் பங்காற்றி ஒரே நாடாக நாம் இதனை நிறைவேற்றி உள்ளோம். தற்போது உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரசை தடுத்து நிறுத்தவும், மக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும் என்பதே ஒரே வழியாகும். ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து தொலைவில் இருங்கள். உங்களது வீடுகளில் இருங்கள். இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 3 வாரங்கள் தொடர்ந்து முடக்கப்படுகிறது

இந்திய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்வடைந்து உள்ளது. இவர்களில் 39 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர் எனவும் தெரிவித்து உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்