இந்தியா
Typography

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழகக் காவல்துறை கடுயைமாக எச்சரித்துள்ளது.

நேற்று மாலையில் இருந்தே கண்காணிப்பு பணிகள் தமிழகத்தின் சகல பகுதிகளிலும் உசார் படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சென்னை மாநகரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே விஸ்வநாதன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

சென்னையில் உள்ள 135 போலீஸ் நிலையங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சென்னை மாநகர சாலைகளில் தேவையில்லாமல் நடமாடுபவர்களை பிடிப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து யாரும் வெளியேற முடியாத வகையிலும் வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாத வகையிலும் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதே நடவடிக்கைகள் தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து மாவட்ட எல்லைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆயினும் ஆங்காங்கே, பொதுமக்கள் முடக்குதலை மீறி வெளியே வருவதால், இந்திய தண்டனைச் சட்டம், 188 பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடும் என்பதை மாநில அரசுகள் அறிவுறுத்துகின்றன. அரசின் உத்தரவுகளை மீறும் , ஒரு நபர் ஆறு மாதங்கள் வரை சிறை வாசம் அனுபவிக்க நேரிடும் அல்லது ரூ.1000 அபராதம், சிறை இரண்டும் விதிக்கப்படும்.

ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்