இந்தியா
Typography

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தமது முழுமையான ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் பிரதமர் மோடி, தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவிற்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தமது ஆதரவினை பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அவரது கடிதத்தில் “ கொரோனா நோய் தொற்றை தடுக்க அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் , நாங்கள் ஆதரவு அளிப்போம் என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைவராக, உறதிபடத் தெரிவித்துக்கொள்கின்றேன் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் மேலும், கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கான புதிய மருத்துவமனைகளை விரைந்து கட்ட வேண்டும். 100 நாள் திட்ட தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், மூடப்படும் ஆலைகளில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வங்கி கடன்களுக்கான கால அவகாசங்களை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் அவசியம் இன்றி சுற்றுவோர் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்