இந்தியா

தமிழகத்தில் மிக விரைவாக கொரோனா பரவுதலைத் தடுத்து விட முடியுமென நம்புவதாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இது தொடர்பில் தமிழகத்தில் எடுக்கப்ட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர்மேலும் தெரிவிக்கையில், கொரோவை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் என்பன அறிவுறுத்திய சகல வழிமுறைகளையும் பின்பற்றுவதோடு, அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது, தனியார் மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளி நிரவாகங்களுடனும் பேசி, கொரோனாவுக்காக தனி படுக்கை வசதிகளை உருவாக்கி உள்ளோம். போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் 1500 படுக்கைகளும், சவிதா மருத்துவ கல்லூரி, மியாட் மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் 500 படுக்கைகளும் இந்த வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், பி.சி.ஆர். கருவி மூலமாகவே தற்போது கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இந்த கருவி மூலமான பரிசோதனை முடிவுகள் பெறுவதற்கான காலம் 5 மணி நேரமாகிறது. இதனை விரைவுபடுத்தினால் ஒரு நாளில் அதிகம் பேருக்குச் சோதனை செய்யமுடியும். ஆதலால் ஒரு லட்சம் அதிவிரைவு சோதனை கருவிகளை வாங்க உள்ளோம் அநேகமாக அவை ஏப்ரல் 10ந் திகதி வரையில் எமக்கக் கிடைக்கும். இரத்த மாதிரியை வைத்து பரிசோதிக்கப்படும் இந்தக் கருவி மூலம் விரைவில் முடிவுகளை கண்டறிவதால் அதிகம் பேருக்கு சோதனை நடத்த முடியும்.

வைரஸ் தொற்றுக்குள்ளான போதும், அறிகுறி இல்லாதவர்களாலேயே நோய் பரப்புவது காணப்படுகிறது. புதிய கருவி மூலம் சோதனை நடத்தும் போது நோய் தாக்கியவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம் எனவும் குறிப்பிட்டார்.

தற்பொது தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் ஆய்வு மையங்கள் 17 உள்ளன. இந்த வாரத்தில் மேலும் 10 புதிய ஆய்வு மையங்களை உருவாக்க இருக்கிறோம். நோய் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், கடுமையான சுவாச நோய் தொற்று இருப்பவர்கள் என அனைவரையும் பரிசோதித்து வருகிறோம்.

எமது செயற்பாடுகளுக்கான ஆலோசனைகளுக்காக, அட்லாண்டாவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் என்பவற்றுடன், நாடளவியரீதியில் உள்ள அனுபவம்மிக்க பல மூத்த மருத்துவ நிபுணர்கள், வைரஸ் ஆய்வு நிபுணர்கள் ஆகியோருடனும் தொடர்ந்து பேசி வருகின்றோம். ஆலோசனைகளைக் கேட்டு வருகின்றோம்.

சமூகத்ட தொற்று நடந்து விடக் கூடாது என்பதற்காக ஊரடங்கு மற்றும் சமூக விலகல் திட்டங்களும், சீனாவை போலவே கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி சோதனை செய்தோம். இதற்காக ஒரு மைக்ரோ திட்டத்தை தொடங்கினோம். இதனால் சமூக பரவல் எதுவும் ஏற்படவில்லை. ஆதலால் தமிழ்நாட்டில் விரைவில் நோய் பரவுதல் எண்ணிக்கை குறையும் எனும் நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :