இந்தியா

இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் புலம்பெயர் ஈழத் தமிழர் கோபாலகிருஷ்ணன். இவர் ‘அகிலன் அறக்கட்டளை’ eன்ற அறநிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன்மூலம், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார்.

இந்த அறநிறுவனம் இலங்கையிலிர்ந்து தமிழகத்தில் புலம் பெயர்ந்து, திருப்பூர் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு உதவிட விரும்பி, திராவிடர் விடுதலைக் கழகத்தை அணுகினர்.

அதன் தலைவர் கொளத்தூர் மணி வழிகாட்டுதலின்படி, மே மாதம் 07-ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில், திருமூர்த்தி மலையில் உள்ள, ஈழத்தமிழ் ஏதிலியர் முகாமில் உள்ள, 110 குடும்பங்களுக்கு உணவு பொருட்தொகுப்புகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மே 09ம் தேதி, பொள்ளாச்சி அருகில் உள்ள கோட்டூர் ஈழத்தமிழ் ஏதிலியர் முகாமில், பதிவு அட்டை உள்ளவர்களுக்கும், பதிவு அட்டை இல்லாதவர்களுக்குமாக மொத்தம் 300 குடும்பங்களுக்கும் தேவையான அத்தியாவசிய, உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பதிவு அட்டை இல்லாதவர்களுக்கு மேலதிகமாக அரிசியும் வழங்கப்பட்டது.

அடுத்ததாக மே 12-ம் தேதி, ஆழியாறு ஈழத்தமிழர் ஏதிலியர் முகாமில் வாழ்ந்து வரும் 281 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்தொகுப்புகள் வழங்கப்பட்டது. அரசு வலியிறுத்தி வரும் அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் கடைபிடித்து, தனிமனித இடைவெளியைக் கைகொண்டு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளரும், உடுமலை நகர பொறுப்பாளருமான தோழர் ஜீவானந்தம், அவருடைய துணைவியார் சாந்தி, கோட்டூர் முகாம் தலைவர் செல்வன், மடத்துக்குளம் மோகன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, ஆனந்த், அரிதாசு, சாந்தி, ஜே.ஆர்.எஸ் ஆசிரியர் மங்களேஸ்வரி, கோவை மாவட்ட செயலாளர் வே.வெள்ளிங்கிரி, , கோ.சபரிகிரி, விவேக் சமரன் மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

தமது கோரிக்கையை ஏற்று, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியமைக்காக அகிலன் அறக்கட்டளை நிறுவனர் கோபாலகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு முகாமில் வசிக்கும் மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.