இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமான ஊரடங்கின் கட்டுப்பாடுகள், பல்வேறு மாநிலங்களில் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே 7ம் திகதி சென்னை தவிர்ந்த பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

'குடி" மக்கள் அதனைக் கோலகலமாகக் கொண்டாடிக் குடித்து மகிழ்ந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி மறுதினம் , மே 8ந் திகதி மாலை , சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநலவழக்கில் வழக்கப் பெற்ற உத்தரவு காரணமாக கடைகள் மூடப்பட்டதால் கலைந்து போனது. தவித்துப்போன 'குடி" மக்களுக்கான நீதி வேண்டி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் , உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மேன்முறையீடு செய்ய, உச்ச நீதிமன்றம் நேற்று அந்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்தது.

'குடி' மக்களுக்கான நீதியில் வெற்றி பெற்ற தமிழக அரசின் உத்தரவில், இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளை , கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தவிர ஏனைய இடங்களில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான புதிய நடைமுறைகளின்படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்படும் எனவும், 500 டோக்கன்கள் மட்டுமே ஒவ்வொரு கடையிலும் வழங்கப்படும் என்றும் , கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் பொது நலன் கருதிய பாதுகாப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உச்சநீமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு குறித்தும், தமிழக அரசின் செயல் குறித்தும் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பதிவில், " மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த தமிழக அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதிமன்றமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது." எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.