இந்தியா

இந்தியாவின் அரச நிர்வாக இயந்திரம் முற்றாகப் பழுதடைந்து விட்டதாகவும், கொரோனா வைரஸ் தொற்றினை பாஜக அரசால் தடுக்க முடியாது எனவும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கின் 3ம் கட்டம் இன்றுடன் முடிவடைகிறது. அரசு என்ன செய்யப் போகிறது ? மத்திய அரசு என்ன செய்ய போகிறது ? என ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவு மூலம் பகிரங்கமாக கேட்டுs;ளார்.

" கொரோனா தொற்று நேற்று மட்டும் 4675 பேருக்குப் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்த முடியாதவாறு, அரசின் நிர்வாக இயந்திரம் முற்றாகச் சேதமடைந்து கிடக்கிறது. மக்களுக்கான தேவைகளையும், சேவைகளையும், நேரடியாக வழங்கக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் பல மாநிலங்களில் செயலற்றுக்கிடக்கின்றன. இவ்வாறான நிலையில், ஒவ்வொரு மனிதரும் சுயமாகவே தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதே இதற்கான ஒரேவழி " எனக் கூறியுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :