இந்தியா

தமிழகத் தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், அதனை முழுமையாகக் கட்டுப்படுத்தும், நோக்கில், புதிய திட்டம் ஒன்று உருவாகியுள்ளது. கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் “நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டம்” என்னும் திட்டமொன்றினைப் பரிந்துரைக்க, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தினை தொடக்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றலைத் தவிர்ப்பதற்காக, கூடுதல் கவனம் எடுக்கப்படுகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த திட்டப்பணிக்காக கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் இணைகின்றார்கள். ’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம் மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து சோதனைகள் நடத்தப்படவுள்ளன. வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்ப சோதனை நடத்துவதுடன், சளி இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்றும் சோதனை செய்து, அவ்வாறானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :