இந்தியா

அம்பான் சூறாவளியின் தாக்கம் "கொரோனா வைரஸை விட மோசமானது" என்று வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார், இன்று மாலை மாநில தலைநகர் கொல்கத்தாவின் மையப்பகுதி வழியாக மூன்று மணி நேரத் கோரத் தாணடவமாடியதில், மூன்று பேர் இறந்துள்ளனர், மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் மழை மற்றும் பலத்த காற்றுக்குப் பிறகு, மதியம் 2.30 மணியளவில் , 30 கி.மீ.க்கு மேல் பரவியிருந்த கடுமையான சூறாவளி புயல், கொல்கத்தாவை கடந்து சென்றது காற்றின் வேகம் 100 முதல் 120 கி.மீ. வரை இருந்ததாகவும், மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் பிடுங்கப்பட்டன, நிறுத்தப்பட்டிருந்த கார்கள் ஒன்றின் மீது ஒன்று மோதின.

தாழ்வான பகுதிகளில் உள்ள பல வீடுகள் நீரில் மூழ்கின, சில வீடுகள் ஜன்னல் பலகைகள் சிதைந்து , சுவர்கள் இடிந்து விழுந்ததால் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. கொல்கத்தாவின் பல பகுதிகள் மணிக்கணக்கில் மின்சாரம் துண்டிகப்பட்டது. முன்னதாக வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :