இந்தியா

இந்தியா முழுவதிலும், கொரோனா பரவலுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவின் 4ம் கட்டம் நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு, கூட்டமாகச் சேர முடியாது, மனித இடைவெளி என்பன காரணமாக திரைத்துறைப் படப்பிடிப்புக்களும், பணிகளும் நிறுத்துவைக்கப்பட்டன.

விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வு நிலைகள் அறிவிக்கப்பட்டு வரும் இவ்வேளையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தடை செய்யப்பட்ட மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது. உள்ளரங்க படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். படப்பிடிப்பில் வெளியாட்கள், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளைத் தவிர ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையர், மாவட்டங்களில் ஆட்சியர் அனுமதியை பெற வேண்டும். படப்பிடிப்பில் அதிகபட்சம் 20 பேர் வரையில் மட்டுமே பங்குகொள்ளலாம் எனபன முக்கிய நிபந்தனைகயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :