இந்தியா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கு நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து, பதிவிட்டுள்ளார்.

1944, ஆகஸ்ட் 20, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி , ஃபெரோஸ் காந்தி தம்பதியினருக்கு மகனாக மும்பையில் ராஜீவ் காந்தி பிறந்தார். 1984 ஆம் ஆண்டில் அவரது தாயாரும் மற்றும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று, அரசியல் வாழ்வுக்குள் பிரவேசித்த ராஜீவ் காந்தி, 1984 முதல் 1989 வரை நாட்டின் ஆறாவது பிரதமராக பணியாற்றியவர் என்பதும், இந்தியாவில் பிரதமர் பதவியை வகித்த இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :