இந்தியா

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நிலைகுலைந்துள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில், ரிசர்வ் வங்கி முழுமையாக அக்கறை கொள்ளும் என , ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்; கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது தொழில்துறை உற்பத்தி 17% ஆக குறைந்துள்ளது. உற்பத்தி நடவடிக்கைகள் 21% குறைந்துள்ளது. ஆயினும் உணவு தானிய உற்பத்தி 3.7% அதிகரித்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

2020-21 ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியாண்டின் இரண்டாம் பாதியில் சில முன்னேற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மக்களுக்கான உதவியாக, வங்கிக்கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக மூன்று மாத அவகாசம் (ஆகஸ்ட் 31ம் தேதி வரை) வழங்கப்படுகிறது. சிறு தொழில் கடன் வழங்கவும் திட்டங்கள் ஆராயப்பட்டுள்ளது. 15 ஆயிரம் கோடி ரூபாய்கள் இதற்கான நிதியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாக குறைக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.