இந்தியா

கொரோனா வைரஸட அச்சுறுத்தல் காரணமான ஊரடங்கின் 4ம் கட்டத்தில், அறிவிக்கப்பட்டு வரும் பல்வேறு தளர்வுகளின் வரிசையில், தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தொற்றுத் தவிர்ப்புக்கான நிபந்தனைகளுடன், நாளை முதல் ஆட்டோக்கள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆட்டோக்கள் இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு அமைந்துள்ளன. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்மே ஆட்டோக்கள் சேவையில் ஈடுபட முடியும். ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டுமே ஆட்டோவில் செல்ல அனுமதி. சென்னை உட்பட நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :