இந்தியா

மேற்கு வங்காள மாநிலத்தை கடுமையாகத் தாக்கிய அம்பன் புயல் பாதிப்புகளை விமானத்திலிருந்து பார்வையிட்டார் பிரதமர் மோடி. கொரோனா வைரஸ் தாதக்கத்தின் பின்னதாக, முதன் முறையாக இன்று பிரதமர் மோடி, டெல்லியை விட்டு வெளிமாநில மாநிலமொன்றுக்குச் சென்றுள்ளார்.

இன்று காலை கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். அவருடன் சேர்ந்து, அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்ட பிரதமர் மோடி, பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, " அம்பன் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்காள அரசுக்கு முதற்கட்டமாக ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி அளிக்கப்படும் எனவும், அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் உறுதுணையாக இருந்து உரிய நிவாரணங்கள் கிடைக்க வழி செய்யும்" எனவும் குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.