இந்தியா

தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைதுசெய்யப்பட்டார். ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதி நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தேனாம்பேட்டை போலீசில் கொடுக்கபட்ட புகாரினடிப்படையில், தேனாம்பேட்டை போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டிற்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை அவரைக் கைது செய்தனர். ஆர்.எஸ்.பாரதியின் கைதினைக் கண்டித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா கால ஊழல்களை மறைக்கவும், அரசின் நிர்வாகச் செயற்பாட்டுத் தோல்விகளை மூடி மறைக்கவுமே, ஆர்.எஸ்.பாரதியை கைது செய்திருப்பதாகவும். குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யபட்ட அவர்  இன்று காலை சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன், ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்.எஸ் பாரதி மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். 

இவற்றையும் பார்வையிடுங்கள்

வடக்கு மாகாணத்தில் 84 கொரோனா தொற்றாளர்கள் மட்டுமே, கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது சிங்கப்பூரில் இருக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிக்கை இன்று வியாழக்கிழமை அல்லது நாளை தமக்கு கிடைக்கும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

புரேவி புயல் அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி; தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.