இந்தியா

இந்தியாவின் வட மாநிலத் தொழிலாளிகள் தமது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் துயரம் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவிலுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற காரணங்களுக்காக வந்துள்ளவர்கள் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதற்கான சிறப்பு ரயில்களுக்கான செலவை மாநில அரசே ஏற்கும் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.

சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் தொழிலாளர்களின், பயண கட்டணத்தில் மத்திய அரசு 85 சதவீதத்தை ஏற்றுக்கொள்வதாக் தெரிவித்துள்ள நிலையில், கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா “கர்நாடகத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற காரணங்களுக்காக வந்துள்ளவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான செலவை மாநில அரசே ஏற்கும்" என தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :