இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கானொளி வழியாக நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தலைமையுரை ஆற்றுகையில், சோனியா காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 22 கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில், பங்கேற்கிருந்தனர்.

இத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று நடத்தப்பட்ட இந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேலும் குறிப்பிடுகையில், " கொரோனாவுக்கு எதிரான போர், 21 நாட்களில் முடிந்து விடும் எனும் பிரதமர் மோடியின் நம்பிக்கை தவறாகிப் போய்விட்டது. தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரை கொரோனாவின் தாக்கம் தொடரப் போகிறது. மத்திய அரசு, இப்போது திணறுகிறது. ஊரடங்கு விதிமுறைகளை வகுப்பதிலோ அதிலிருந்து வெளியேறுவதிலோ தெளிவற்று இருக்கிறது.

திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உணவு, பணம், மருந்து ஆகியவை இல்லாமல் சாலைகளில் நடந்து சென்று கொண்டிருந்ததை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மக்களுக்கு உதவி செய்வதை விட்டு, சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை விற்க முயற்சி செய்கிறது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதமோ ஏனைய கட்சிகளிடம் ஆலோசனையோ நடத்தவில்லை. அரசின் தன்னிச்சையான இந்த முடிவை நாங்கள் கண்டிக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.

முகமாலையில் புலிச் சீருடைகளுடன் மனித எச்சங்கள்!

இது இவ்வாறிருக்க, மத்திய சுகாதாரத்துறையின் இன்றைய புள்ளி விபரங்களின்படி, இந்தியாவில் இதுவரை மொத்தம் 125101 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 51784 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6654 பேர் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 137 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை, கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3720 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :