இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

பயணங்களை மேற்கொள்வோர் உடல்நிலை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? முதலிய மிக்கிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தவறான தகவல் அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத் தலைநகர் சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. சுமார் இரு மாதகாலம் வரையில், , சென்னை தொழிற்பேட்டைகள் முடங்கிப்போயுள்ளன. இவற்றினை இயங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் வைக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலனை செய்து, சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட்ட 17 தொழிற்பேட்டைகளை, நாளை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் தொழிற்பேட்டைகளில், 25 சதவீதம் அளவிலான பணியாளர்களை கொண்டு இயக்க அனுமதியையும், அதற்கான நெறிமுறைகளையும், தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவ்வாறான அறிவுறுத்தல்களில்,
பணிக்கு செல்லும் தொழிலாளர்களின் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் முன் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். தனிநபர் இடைவெளியுடன் பணிபுரிய வேண்டும். கிருமி நாசினிகள் தெளித்து பணியாற்றும் இடங்களை தூய்மைப்படுத்த வேண்டும். 55 வயது மேல் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வராமல் தவிர்க்கப்படல் வேண்டும். கழிவறைகளை 2 மணிநேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் எனும் விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றுவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.