இந்தியா

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்திவந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மலேரியா நோய்க்கு பயன்படுத்திய ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா எண்ணிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டதால் உலகளவில் பல நாடுகள் அம்மருந்துகளை கொரானோ நோயாளிகளுக்கு பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தின. இந்த மாத்திரை தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் இந்தியாவிடம் அதிகளவில் அமெரிக்கா பெற்றுக்கொண்டது. ஆனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அதிகளவில் பயன்படுத்துவதால் இருதநோய்கள் வருவதற்கான சாத்தியம் இருப்பதாக ஆய்வின் மூலம் எச்சரித்துள்ளனர்.

கடந்த வெள்ளிகிழமை லான்சட் மருத்துவ ஆய்விதழ் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வெண்டிலேட்டர் பயன்படுத்தும் தேவைகளை குறைக்கவில்லை என்றும் இதனால் இறப்புவிகிதத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் எனவும் ஆகையால் இம் மருந்து பாதுகாப்பானதல்ல எனவும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து உலக சுகாதார மையத்தின் நிர்வாக குழு ஹைட்ராக்ஸி தற்காலிகமாக குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை நிறுத்திவைத்துள்ளது. இதன் தொடர்பாக பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்தியதாகவும் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரித்தார்.

இதன் தொடர்பாக மேலும் கூறிய அவர் பல நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஒற்றுமை சோதனைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினைப் பயன்படுத்தி சோதனைகளுக்கான பதிவை தற்காலிகமான இடைநிறுத்துவதற்கான முடிவு என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது இவ்வாறிருக்க;  இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதிலும், இதுவரையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 380 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 4,167 ஆக உயர்வடைந்துள்ளதுடன், 60 ஆயிரத்து 490 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மத்திய சுகாதாரத்துறையின் இன்றைய புள்ளி வபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.