இந்தியா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இரண்டாவது இடத்தை தமிழ்நாடு எட்டியுள்ளது. இந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. அதுவும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது. இன்று வரை சென்னையில் 11,640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் 12 வயதிற்குட்பட்ட 1,088 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 9,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. 646 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 54 பேர் அடக்கம். 611 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஓட்டுமொத்தமாக 9,342 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து சென்னையில் மட்டும் மொத்தம் 1640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 357 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 857 பேரும்,  கோவை மாவட்டத்தில் 146 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 31 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 788 பேரும், திருவண்ணமலை மாவட்டத்தில் 243 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 38 பேரும் கொராேனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொராேனா தொற்றாளர்களின் விபரம் : 

கடலூர் - 436

தருமபுரி - 8 

திண்டுக்கல் - 134

ஈரோடு - 71

கள்ளக்குறிச்சி - 153

காஞ்சிபுரம் - 316

கன்னியாகுமரி - 58

கரூர் - 80

கிருஷ்ணகிரி - 25

மதுரை -  233 

நாகப்பட்டினம் -  51

நாமக்கல் - 77 

நீலகிரி - 14 

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 20 

ராமநாதபுரம் -  64

ராணிபேட்டை -  96

சேலம் -  68 

சிவகங்கை -  29

தென்காசி -  85 

தஞ்சாவூர் -  84 

தேனி - 108

தூத்துக்குடி - 187 

திருநெல்வேலி -  297

திருப்பூர் - 114

திருச்சி - 76 

வேலூர் -  40

விழுப்புரம் - 327 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 116 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.