இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் வெட்டுக்கிளி படையெடுப்பின் தாக்கத்தால் ராஜஸ்தான் மாநிலத்தில் 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்து. 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பும் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் பிப்ரவரிவரை தொடர்ந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பு பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்குள் தொடர்ந்து படையெடுத்துவருகின்றன.

பாலைவனப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான ஈரான், ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் உருவாகும் இந்த பூச்சிகள் படையாக உருவாகி பயிர்களைச் சேதப்படுத்தும். 6 முதல் எட்டு வாரங்கள் வரை உயிர்வாழக்கூடிய இப்பூச்சிகள் அறுவடைக்குத் தயாராக உள்ள வேளாண் பரப்புக்களை காற்றின் மூலம் அறிந்து அந்தத் திசையில் இவை படையெடுக்கும்.

தற்போது பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் பெருகி வருவதால் விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்நிலை தொடருமனால் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு நிலை ஏற்படலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

எனினும் பயிர்களை வெட்டுக்கிளிகளிடமிருந்து காப்பதற்காக மகாராஷ்டிரா அரசு வேதியில் திரவத்தை தெளிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை சமாளிக்க உத்திரபிரதேசத்தின் மதுரா பகுதிகள் தயாராகிவருகிறது.

வெட்டுக்கிளி படையெடுப்பின் அடுத்தகட்டமாக டெல்லிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வழக்கமாக வடமாநிலங்களுடன் இந்த படையெடுப்பு நின்று விடும் என்றும் அதனைத்தாட்டி தமிழகம் வரை வந்ததில்லை என்றும் தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

எனினும் அவ்வாறு தாக்குதல் நடைபெறுமெனில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதையும் வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

வடக்கு மற்றும் மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று இந்தியா, இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஸ்ரீநகர் புறநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2016 ஆமாண்டு துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் 19 ஈரான் சார்பு துருப்புக்கள் பலியானதாக வியாழக்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.