இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவினால் கொரோனா வைரஸ் சமூகத் தொற்று குறைந்தது எனக் கூறப்பட்டாலும், மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக எழுந்தது புலம் பெயர் தொழிலாளர்களின், சொந்தமாநிலங்களுக்கான நகர்வுகள்.

நாடளாவிய ரீதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பல இன்னல்களுக்கு மத்தியில் செல்கிறார்கள். இதனையடுத்து அவர்களது ரயில் கட்டண செலவை மாநிலங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

கொரோனா பாதிப்பின் ஊரடங்கால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புலம் பெயர் தொழிலாளர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி நடந்தே செல்லும் அவலத்தால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதில் மத்திய மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

மேலும் சொந்த ஊர்களுக்குச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டண செலவை மாநிலங்கள் பகிர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கான உணவு, நீர் மற்றும் இருப்பிட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.