இந்தியா

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொன்றுக் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை வருகின்ற ஜூலை மாத அளவில் திறக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடனான ஆலோசனைக்கு நடத்திய பிறகே இந்த தீர்மானத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் நாடு முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரம் பெற்றோர் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட்ட மனு ஒன்றை அரசுக்கு அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

அதில் கொரோனா நோய்த்தொற்று அபாயம் முழுவதுமாக நீங்கும்வரை அல்லது அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்பட கூடாது என்றும் ஆன்லைன் கல்வி முறையே அதுவரை தொடர வேண்டும் எனவும் எழுதப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.