இந்தியா

இந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மே மாதம் 28ஆம் திகதியிலிருந்து நவுஷரா பிரிவில் உள்ள கட்டுப்பாட்டு எல்லை வழியாக இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி மறைந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றது. அவர்களை தீவிரமாக தேடும் வேட்டையில் இந்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

அந்நேரம் 3 பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் காணப்பட்டதையடுத்து அவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மேலும் 10 பயங்கரவாதிகள் மெந்தர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து இன்று அவந்திபோராவில் நடந்த மோதலில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று ஒரே நாளில் ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயற்ற 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது

இந்தியாவுக்குள் கொரோனா தொற்று பரவலின் மறைவில் ஏராளமான பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.