இந்தியா

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று சனிக்கிழமை இருநாட்டு படைகளிலிருந்தும் லெப்டினன்ட் ஜெனரல்கள் தலைமையிலான இந்திய மற்றும் சீன இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.

இதில் லடாக் பிராந்தியத்தில் தங்களின் பகிரப்பட்ட எல்லை தொடர்பான சர்ச்சையை இரு தரப்பினரும் 'அமைதியான கலந்துரையாடல்' மூலம் தீர்க்க ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த பேர்ச்சுவார்த்தை லடாக் எல்லைப்பகுதி நிலைப்பாட்டிற்கு உடனடி முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது என்று அதிகாரிகள் சில குறிப்பிடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா; சீனாவை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு இருப்பதாலும் அதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சீனாவுக்கும் இடையில் உருவாகியுள்ள இந்த சூழலால் நீண்ட நாட்களுக்கு எவ்வித தீர்வுகளும் விரைவில் எட்டப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

சமீப நாட்களாக இந்தியாவும், சீனாவும் எல்லயில் படைகளைக் குவித்து வருவதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் உயர் மட்ட இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் போருக்கு ஆயத்தமாக இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டு இராணுவத்தினருக்குப் பணித்திருப்பதாலும் இரு நாடுகளுக்கு இடையேயும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.