இந்தியா

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள், இறந்தவர் மற்றும் குணமடைந்தவர்கள்; எண்ணிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன் படி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர் வீதம் 48.27சதவீமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட 9,851 பேரையும் சேர்த்து இந்தியாவில் பாதிப்பு மொத்தம் 2,36,657 ஆக உயர்ந்துள்ளது.

இறுதி 15 நாள்களில் மட்டும் புதிதாக இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த இறப்பு 6,642 ஆக உள்ளது.

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மொத்தம் 9,000 க்கும் அதிகமான பாதிப்புகள் உள்ளன.

இதனால் இத்தாலியை முந்தி 6 வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளதுடன். 6,642 இறப்புகளுடன், மிக மோசமான பாதிப்புக்குள்ளான 12 வது நாடாக உள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் உள்ள போதும் சில மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து விளக்கமளித்த அவர் அறிமுகப்படுத்தப்பட்ட செல்லிடப்பேசி செயலி மூலம் மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம் எனவும் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுத்துள்ளார், மேலும் வேறு குறுக்கு வழியில் படுக்கை வசதியை மருத்துவமனையில் பெற முயற்சிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.