இந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் மாநிலங்களின் வரிசையில் தமிழகத்தை முன்னணியில் வருவதற்கு தமிழக அரசின் அலட்சியமான போக்கும் நடவடிக்கைகளுமே காரணம் என, எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

கானொலிக்காட்சி வழியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு அதிகமாகவுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறியுள்ளதை அரசு மறுத்து வருகிறது. ஆனால் அது சமூகத் தொற்றாக மாறிவிட்டமைக்கான ஆதாரம் இருக்கிறது எனக் குறிப்பட்டார்.

சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டிருப்பது கவலை தருவதாகும். கொரோனா தொற்றுத் தொடர்பிலான இறப்பு விவரங்களை வெளிப்படையாக தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். அரசு உயர் அதிகாரிகளுக்கு இடையேயான பதவி போட்டி மற்றும் அமைச்சர்கள் இடையிலான குழு சண்டை , கொரோனாவை பற்றிய எந்த புரிதலும் இல்லாத முதலமைச்சர் என்பனவற்றால் தடுமாறும் தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியில் தோல்வி அடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு குறித்தும், வரும் 17ந் திகதி பிரதமருடன் மேற்கொள்ளவுள்ள ஆலோசனைகள் தொடர்பில் பேசவேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.