இந்தியா

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக மருத்துவக் குழுவினர் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் உச்சகட்டத்தை அடைந்த பின்புதான் குறையும் என கூறியிருந்தோம். அதுபோல பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கும். எனினும், மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது அலை உருவாக வாய்ப்புள்ளது” என்று கூறியது. சென்னையில் ஊரடங்கு தொடர்பான நடவடிக்கைகளைக் கடுமையாக்குவது குறித்தும் முதல்வருக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையில் 12 நாள்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடக்கும். அவசரத் தேவைகள் தவிர்த்து வாடகை ஆட்டோ, டாக்ஸி, மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மாநில அரசு துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும்.

மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவிதித பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரவேடிய அவசியம் இல்லை. வங்கிகள் 33 சதவிகித பணியாளர்களோடு 29, 30 ஆகிய நாள்களில் மட்டும் செயல்பட அனுமதி உண்டு. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் அது தொடர்பான வங்கிப்பணி, மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.

பொது விநியோகக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். எனினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வரும் பொது விநியோகக் கடைகள் இயங்காது. காய்கறி கடைகள், மளிகை கடைகள், மற்றும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தான் செயல்பட வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் வாங்கும் மக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் 2 கி.மீ தொலைவுக்குள் சென்று பொருள்கள் வாங்கி வர வேண்டும்.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மனி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. அம்மா உணவங்கள் மற்றும் ஆதரவற்றோருக்குக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதி பெற்று இயங்கலாம்.

சரக்கு போக்குவரத்துக்கு தடை இல்லை. சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல உரிய ஆவணங்களைக் காட்டியபிறகே இ-பாஸ் வழங்கப்படும். வெளிமாநில மற்றும் வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் முறையே தொடரும்.

21-06-2020 மற்றும் 28-06-2020 ஆகிய இரு ஞாயிற்றுகிழமைகளில் மேற்கண்ட எந்த தளர்வுகளும் இன்றி முமையான ஊரடங்கு அமலில் இருக்கும். கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.