இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட நாடாளாவிய ஊரடங்கு நந்து கட்டங்களாக நீடிக்கப்பட்டும், வைரஸ் தொற்றின் பரவல் சில மாநிலங்களில், கட்டுக்குள் வரவில்லை.

தமிழகம் உட்பட மேலும் சில மாநிலங்களில் அது சமூகத் தொற்று நிலைக்கு விரிவடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றும், நாளையும் பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

பொது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார செயற்பாடுகளுக்கான தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஐந்தாம் கட்ட ஊரடங்கு வருகிற 30-ந் திகதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாளுக்கு நாள் நோய்த்தொற்று பரவலும், உயிர் இழப்பும் அதிகரித்து வருகின்றன. நாடாளவிய ரீதியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை மந்திரி அமித்ஷா, சுகாதார துறை மந்திரி ஹர்ஷ வர்தன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். இதகைத் தொடர்ந்து, இன்றும், நாளையும் பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் அவர் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வது இது 6வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.