இந்தியா

மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணமாக 1000 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த நிவாரண உதவியைப் பெறக்கூடியவர்களாக, 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர் எனவும், இவர்கள் அனைவரும் அதற்குரிய அடையாள அட்டையினை வைத்துள்ளனர் எனவும் தெரிய வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.