இந்தியா

இந்திய சீன எல்லையான லடாக் பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு, இரு தரப்புப் படைகளுக்குமிடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில், 20 வீரர்கள் பலியானதை இந்திய இராணுவ தரப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

முதலில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காயங்களுக்குள்ளான மேலும் 17 வீரர்கள் மரணமடைந்துள்ளதாகவும், அதனால் பலி எண்ணிக்கை 20 அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மரணமடைந்த இராணுவத்தினரில், தமிழகத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பழனி எனும் வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவரென்றும், இந்திய இராணுவத்தில் கடந்த 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார் எனவும் அறிய வருகிறது.

இந்த மோதலைத் தொடர்ந்து பதற்ற நிலையில் இருக்கும் எல்லைப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த இரு தரப்பு இராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.