இந்தியா

இந்திய சீன எல்லையில், சீனா ஆயுதங்களுடன் ஆயிரக்கணக்கான வீரர்களைக் குவிக்கத் தொடங்கியதும், இந்தியாவும் இப்பகுதிகளில் பெருமளவிலான வீரர்களை குவித்தது. இந்நிலையில், இரு தரப்பிலும் இராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினர்.

இதில் இரு நாடுகளும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டிருந்தன. இந்த சூழலில் நேற்று முன்தினம் பாயிண்ட் 14 எனும் பகுதியில் இரு நாட்டு வீரர்களிடையே மோதல் வெடித்தது. இந்த பகுதியில் சீன படைகள் கூடாரம் அடித்தன. அதனை இந்திய படையினர் அகற்றச் சொல்லிய போது, இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.

இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆயினும் தமது தரப்பில் 5பேர் பலியானதாக சீன ஊடககங்கள் தெரிவித்துள்ளன.

இருநாட்டு வீரர்கள் மத்தியிலும் கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அரசுகள் மட்டத்தில் சமரசங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் லடாக் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், " லடாக் எல்லையில் மோதல்கள் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை. இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக முடித்துக் கொள்ளவே சீனா விரும்புகிறது " எனத் தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.