இந்தியா

கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர் பத்திரிகையாளர்கள் என முன்களப் பணியாளர்களில் காவல்துறையினரின் பங்களிப்பு அதிகமானது.

நோய்த்தொற்று ஆபத்து அறிந்தே முக கவசம் அணியாமல் போதிய இடைவெளி இன்றி தேவையற்று சுற்றித் திரியும் பொறுப்பற்ற மக்களை கட்டுப்படுத்தும் பணியில் சாலைகளில் இரவும் பகலுமாக பாடுபட்டு வருகின்றனர் காவல்துறையினர். இதுவரை சென்னையில் மட்டும் 700க்கும் அதிகமாக காவல்துறையினர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 

சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்

17-06-2020 இயற்கை எய்திய காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள் , கடந்த மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஒருவரது குடியிருப்பு பகுதியில் பத்திரிகையாளர் குடும்பத்தின் மீது ஒரு சிலர் வெறுப்புணர்வை காட்டியபோது நேரில் சென்று உதவியதை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைக்கின்றோம். கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட ஆய்வாளரின் மருத்துவ சிகிச்சைக்கு சென்னை பெருநகர காவல் ஆனையர் தனிப்பட்ட அக்கறை எடுத்து பல உதவிகள் செய்த நிலையில் இன்று திரு.பாலமுரளி அவர்கள் நம்மை விட்டு மறைந்தார்.

கொரோனா நோய்த்தடுப்புப் பணியில் முன்கள வீரராக செயல்பட்டு 47 வயதிலேயே தன் இன்னுயிரை இழந்திருக்கும் திரு.பாலமுரளியின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.ஆய்வாளர் திரு.பாலமுரளியை இழந்து வாடும் குடும்பத்தினர் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரது துயரத்தில் பங்கேற்கிறோம்.

ஆழ்ந்த இரங்கலுடன்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.