இந்தியா

மிகவேகமாக கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது இந்தியா. ஆசியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் மிகப்பெரிய மையமாக மாறிவரும் இந்தியா, உலகளவில் தொற்றின் அதிக பாதிப்புக்குள்ளான நான்காவது நாடாகத் தற்போதுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலின்படி, இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவிலான பரிசோதனைகள் நடைபெறத் தொடங்கியுள்ளமையும் இந்த அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,67,000 ஐக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 344 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையிலான மொத்த இறப்பு எண்ணிக்கை 12,200. தொற்று ஏற்பட்டதின் பின்னதான சிகிச்சையில், 194325 பேர் குணமாகி உள்ளனர். அதிகளவிலான தொற்று ஏற்பட்டிருந்தாலும் இறப்பு வீதம் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் உயிரிழப்பு விகிதம் 3.3 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பை எதிர்த்து போராட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) இந்தியாவுக்கு 750 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5712 கோடி) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு உதவும் என வங்கி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்த நிதியுதவி திட்டம், சமூக பாதுகாப்பு வலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சுகாதார சேவையை மேம்படுத்துதல், என்பவற்றுடன் வணிகங்களுக்கான பொருளாதார உதவியை வலுப்படுத்துதல், ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.